காதலை காதலிக்க கற்றுத்தரும் பாலாவின் 'வர்மா'!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (11:39 IST)
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம், 'அர்ஜூன் ரெட்டி.' தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ட்ரெண்டையே உருவாக்கியது. 



 
இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பாலா. 
 
முரட்டு தேவதாஸாக விஜய் தேவரகொண்டா பின்னியெடுத்த இப்படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு ‘வர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேகா என்ற கொல்கத்தா மாடல் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இதனை இ4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
 
ரதன் இசையமைக்கும் வர்மா படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். 
 
தற்போது, இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், காதலைக் கொண்டாடும் காதலர் மாதமான பிப்ரவரியில் 'வர்மா'வை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். 
 
இந்த படம் நிச்சயம் காதலர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்