ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய பாலா

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (13:33 IST)
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும் உதவி வருகின்றனர். இந்த நிலையில்  நடிகர் பாலா சென்னை மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.

விஜய் டிவி பிரபலம் பாலா ஏற்கனவே ஆம்புலன்ஸ் தனது சொந்த செலவில் வாங்கி உதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த செய்தார்.

அதன்படி, 2 நாட்களுக்கு முன்பு பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள  200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார். அவருடைய அக்கவுண்டில் மொத்தமே 2 லட்சம் ரூபாய் தான் இருந்ததாகவும் அதை 200 குடும்பங்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டுகள் கூறினர்.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில்  நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார் பாலா.

பள்ளிக்கரணையில் 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு நைட்டி, லுங்கி உள்ளிட்ட ஆடை மற்றும் உதவித் தொகை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்