வாரிசு நடிகருடன் டூயட் பாடும் அதுல்யா - வைரலாகும் ரொமான்ஸ் வீடியோ!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (20:49 IST)
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
 
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.
 
அதையடுத்து சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்கிற விவகாரமான படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டூயட் பாடல் மேக்கிங் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.  இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்