நடிகர் ஆரி 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நெடுஞ்சாலை, மாயா , மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது அலேக்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மனைவியின் பிறந்தநாளில் நண்பர்களை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு " ன் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்கிய என் மனைவி நதியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என கூறி வாழ்த்தியுள்ளார்.