"அசுரன்" படத்தின் உருக்கமான பாடல் வீடியோ!

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (13:18 IST)
வடசென்னை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய இத்திரைப்படம் கடந்த 4ம் தேதி வெளிவந்தது. 
 
படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாராட்டு மழையில் நனைந்த அசுரன்  விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது. சிவ சுவாமி கதாபத்திரத்தில் தனுஷின் நடிப்பும் அவரது மனைவியாக மஞ்சு வாரியாரின் நடிப்பும்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறுள்ள "எள்ளு வய பூக்களையே"என்ற பாடலின்  வீடியோவை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளில் சைந்தவி பாடியுள்ள இப்பாடலுக்கு உருக்கமான இசையமைத்து அனைவரது நெஞ்சங்களை கரைத்துவிட்டார் ஜிவி பிரகாஷ். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்