அசோக்செல்வனின் அடுத்த பட டைட்டில் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (16:54 IST)
அசோக்செல்வனின் அடுத்த பட டைட்டில் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் அசோக்செல்வன் நடித்த ’ஓ மை கடவுளே என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு பின்னர் அவர் மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது. அசோக்செல்வன் நித்யா மேனன் மற்றும் ரிதுவர்மா உள்பட பலர் நடித்த திரைப்படம் ’தீனி’
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் பிப்ரவரி 5ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகை நித்யா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சசி என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரசாத் என்பவர் தயாரித்துள்ளார். ராஜேஷ் முருகேசன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்