குடும்பத்துடன் சுற்றுலா சென்ற கே.ஜி.எஃப் பட ஹீரோ !! வைரல் புகைப்படம்

செவ்வாய், 19 ஜனவரி 2021 (22:20 IST)
சமீபத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி,எஃப்-2  படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. உலகளவில் வேறு எந்தப் படத்திற்கும் இல்லாத வகையில் இப்படத்திற்கு அமோகம் வரவேற்பு ரசிகர்களால் அளிக்கப்பட்டது.

கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலரை சுமார் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்பட டிரைலருக்கு லைக் செய்துள்ளனர்.

இந்தியாவில் தயாராகியுள்ள இப்படத்திற்கு பாகுபலி படத்தைப் போன்று உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ராக் ஸ்டார், ராக்கி பாய் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கபடும் நடிகர் யாஷ் கே.ஜிஎஃப் -2 பட வேலைகள் முடிவடைந்த நிலையில் தந்து குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@thenameisyash)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்