ரிலீஸானது அசோக் செல்வனின் ஹாஸ்டல் பட டீசர்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (17:18 IST)
அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஹாஸ்டல் பட டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பீஸா 2, கூட்டத்தில் ஒருவன், ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் உருவாகிவரும் படம் ஹாஸ்டல்.  இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துவருகிறார். இவர்களுடன் காமெடி நடிகர் சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தி சுமந்த் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கிவருகிறார்.

ஆண்கள் ஹாஸ்டலில் தனியாக மாட்டிக்கொள்ளும் பெண் ஒருவரால் ஏற்படும் கலகலப்பான சம்பவமே ஹாஸ்டல் படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டீசர் இப்போது வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்