அனுஷ்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா...? இதுவே போதுமே அவங்க தலைமுறைக்கு!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (17:12 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. 
 
அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.
 
ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. அதே போல அந்த படத்துக்காக அவர் ஏற்றிய உடல் எடை அதன் பிறகு குறையவே இல்லை. அதற்காக அனுஷ்கா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு படவாய்ப்புகளை தேடி வருகிறார். 
 
இந்நிலையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி  சமூகவலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அவங்க தலைமுறைக்கு இதுவே போதுமே எதுக்கு படவாய்ப்பு கிடைக்கலன்னு க்ஷட்டபட்டு இருக்காங்க? 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்