அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் ‘பொன் ஒன்று கண்டேன்’ பட அறிவிப்பு!

vinoth
வியாழன், 8 பிப்ரவரி 2024 (14:08 IST)
தமிழ் சினிமாவில் சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக கவனம் பெற்றவர் அசோக் செல்வன். அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தன.

ஆனாலும் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் போராடி வந்த அவருக்கு இந்த ஆண்டு ரிலீஸான போர்த்தொழில் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தது. அதையடுத்து கடந்த மாதம் அவர் நடிப்பில் வெளியான ப்ளு ஸ்டார் திரைப்படம் வெற்றியை ஈட்டியது.

இந்நிலையில் இப்போது அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி நடிப்பில் ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்