நீண்ட இடைவெளிக்குப் பின் கம்பேக் கொடுக்கும் ‘அருவி’ இயக்குனர்… விஜய் ஆண்டனிதான் ஹீரோவா?

vinoth
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (09:21 IST)
அருவி படத்தின் இமாலய வெற்றி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வெளிச்சத்தைக் கொடுத்தது.  அந்த படத்துக்கு பின்னர் இயக்குனர் அவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் ஒரு தேக்க நிலை உருவானது. இந்நிலையில் இப்போது அவர் எந்த விளம்பரங்களும் இல்லாமல் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி வருகிறாராம்.

அவரின் இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்