தன்னைப்பற்றி யாராவது அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பதிவு செய்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவின் கீழ் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
ஏஆர் ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, விவாகரத்து குறித்தும், அதற்கான காரணம் என்ன என்பதையும் மையமாக கொண்டு பல அவதூறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மற்றும் யூடியூபில் பதிவாகி வருகின்றன.
இந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பான வகையில், அவதூறு பரப்பும் கற்பனையான சிலரின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்காவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் சட்டப்பிரிவு 356 இன் கீழ் வழக்கு தொடரப்படும் என்று ஏஆர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.