பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, அமைதியாகவும் பிறக்கலாம்.. ஏ.ஆர்.ரகுமான் பிரிவு குறித்து பார்த்திபன்..!

Siva

புதன், 20 நவம்பர் 2024 (08:14 IST)
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை உலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏஆர் ரகுமான் சாய்ரா பானு ஆகிய இருவரும் மிகவும் அன்பான தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென என்ன ஆச்சு என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் ஏஆர் ரகுமான் மனைவியை பிரிவது குறித்த முடிவை எடுத்தது குறித்து கூறியதாவது:

பிரிவு:
இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே…
குடைக்குள் மழை’ நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது.
பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல ,
புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ  இனி(ய)  வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவை  கொண்டாடி வழியனுப்புதல் போலே,
ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்!


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்