இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடிகையும் தனது தோழியுமான அனுஷ்கா சர்மாவை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்ததால் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இப்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளார். அதையடுத்து பிரசவ காலத்தில் அவருடன் கூட இருப்பதற்காக கோலி ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொடரில் கூட கலந்து கொள்ளாமல் இந்தியா திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா பிரபல நாளிதழான வோக் நாளிதழின் அட்டைப் படத்துக்கு நிறைமாத கர்ப்பிணி வயிற்றோடு போஸ் கொடுத்துள்ளார். இந்த இதழ் ஜனவரி 2021 இதழாக வெளிவர உள்ளது.