மீண்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் சர்ச்சை… காரணம் விஜய் சேதுபதியா?

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (17:48 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தின் இயக்குனரான வெங்கட கிருஷ்ணா சமூகவலைதளப் பக்கத்தில் அது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில் ‘இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் உருவாக்கி வைத்திருந்த டீசர் இதுவல்ல. என் தலையீடு இல்லாமலேயே தயாரிப்பு நிறுவனம் இந்த டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளது’ என்று கூறியிருந்தார். பின்னர் அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு இருதரப்பும் சுமூகமாகினர்.

இதையடுத்து இப்போது அந்த படத்தின் இயக்குனர் தலையீடு இல்லாமலேயே படம் முழுவதையும் விஜய் சேதுபதியின் வழிகாட்டலில் படத்தொகுப்பாளர் எடிட் செய்துள்ளாராம். இதையறிந்த இயக்குனர் அதிர்ச்சியாகி பெப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணியிடம் இது சம்மந்தமாகப் புகாரளித்துள்ளாராம். இதனால் விரைவில் இது சம்மந்தமாக விரைவில் பிரச்சனைகள் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்