நடிகர் விவேக் நடிப்பில் வெளியாகவுள்ள 3 படங்கள் !

திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:46 IST)
சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் மற்றும் அஞ்சலி செலுத்தினர்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம்  தாராள பிரபு. இப்படத்தின் ஹீரோ ஹரிஸ் கல்யாணுடன் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். 

இந்நிலையில் அவரது நடிப்பில் 3 படங்கள் விரையில் திரைக்கு வரவுள்ளது.  அதில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் விவேக் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிருஷ்ணா ரோகந்த் இயக்கியுள்ளார்.

இதையடுத்து சரவணா ஸ்டோர்ஸ் சரணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் விவேக் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் விவேக் கமல்ஹாசனுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்