21 நாட்களில் ஓடிடியில் வெளியாகிறதா ‘அண்ணாத்த’

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:34 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’திரைப்படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் திரை அரங்குகளில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘அண்ணாத்த’திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி அதாவது 21 நாட்களில் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடுவதை அனுமதிக்கமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறிய நிலையில் ‘அண்ணாத்த’திரைப்படம் 21 நாட்களில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் டாக்டர் திரைப்படமும் வரும் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்