நிஷா அக்கா மாதிரி தான் இருப்பாங்க - அனிதா அம்மாவின் புகைப்படம் இதோ!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (08:55 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர்.


இவர் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா நிஷாவை பார்த்து நிறத்தில் தன்னுடைய அம்மாவை பார்ப்பது போலவே உள்ளதாக கூறினார். உடல் நிறத்தின் பாகுபாட்டை நிஷா காமெடியாக எடுத்துக்கொள்வது போலவே தன்னுடைய தாய் இருக்கவேண்டும் என கண்கலங்கி அழுத்துவிட்டார் அனிதா. இந்நிலையில் தற்ப்போது அனிதா அம்மாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்