பிரபல நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. அதை சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த காஜல் அகர்வால், கௌதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை நான் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பையில் உள்ள ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாகவும் இந்த திருமணத்தில் எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள். இந்த கொரோனா நேரத்தில் அதிக கூட்டங்களை கூட்ட விரும்பவில்லை. மேலும், திரையுலகை தாண்டி தற்போது தான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உள்ளேன்.