மெட்ரோ ரயில் முழுக்க அனிருத் புகைப்படங்கள்… சென்னை இசை நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட ப்ரமோஷன்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (09:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் அடுத்தடுத்து பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான ஹிட் படங்களிலும் அனிருத்தான் இசை. அந்த அளவுக்கு பிஸியான இசையமைப்பாளராகியுள்ளார் அனிருத். இந்நிலையில் அடுத்து அவர் தற்போது தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

சென்னையில் அக்டோபர் 21 ஆம் தேதி அவரின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் பிரம்மானடமாக செய்யப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில்களில் அனிருத்தின் புகைப்படங்கள் முழுவதும் இடம்பெறுவது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்