எஸ் ஜே சூர்யா & அமிதாப் பச்சன் நடிக்கும் தமிழ்ப்படத்தின் பணிகள் மீண்டும் தொடக்கம்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:24 IST)
அமிதாப் பச்சனின் முதல் தமிழ்ப் படமாக எஸ் ஜே சூர்யாவோடு இணைந்த உயர்ந்த மனிதன் படம் அமைந்தது.

எஸ்ஜே சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் ’உயர்ந்த மனிதன்’. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் தொடங்கியது. ஆனால் இந்த படத்தில் அமிதாப் ஒரு காட்சியில் நடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்த படத்தின் கதை மற்றும் படமாக்கும் திறனில் தனக்கு அதிருப்தி இருந்ததாக அமிதாப் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. மேலும் படக்குழுவினருக்கும் அமிதாப்புக்கும் இடையே கருத்து மோதல் எழுந்ததாகவும் அதனால் படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது எஸ் ஜே சூர்யா அமிதாப் பச்சனை சமாதானப்படுத்தி மீண்டும் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விரைவில் இந்த படம் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை எஸ் ஜே சூர்யாவை வைத்து கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்