15 மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியான சூரரைப் போற்று! கொண்டாடிய ரசிகர்கள்!

சனி, 5 பிப்ரவரி 2022 (10:19 IST)
சூர்யா மற்றும் அபர்னா பாலமுரளி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஓடிடி யில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார்.ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார். இப்படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

இப்போது இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி 15 மாதங்களுக்குப் பிறகு இப்போது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள மிட்லண்ட் திரையரங்கில் ரிலிஸ் ஆகியுள்ளது. புதுப்படம் போல ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்தனர். அது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்