அமைச்சர் மேல் ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்… சமந்தாவுக்கு ஆதரவாகப் பேசிய அமலா!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (14:20 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அது சம்மந்தமான பரபரப்புகள் இப்போதுதான் சற்றுத் தணிந்துள்ள நிலையில் இப்போது ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் கே டி ராமாராவ் இருந்தார் எனப் பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இது சம்மந்தமாக கண்டனத்தைப் பதிவு செய்த சமந்தா “என்னுடைய விவாகரத்து என்பது தனிப்பட்ட விஷயம். பரஸ்பர சம்மதத்துடன்தான் எங்கள் மணவாழ்க்கை முடிவுக்கு  வந்தது.  அதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை. என்னுடைய பெயரை உங்கள் அரசியல் சண்டைகளில் பயன்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார். அதையடுத்து அமைச்சர் சுரேகா, தன்னுடைய பேச்சை நிபந்தனையில்லாமல் திரும்ப பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமந்தாவுக்கு ஆதரவாக நடிகையும் அவரின் முன்னாள் மாமியாருமான அமலா குரல் கொடுத்துள்ளார். அதில் “ ஒரு பெண் பேயாக மாறியது. துளிகூட வெட்கமோ உண்மையோ இல்லாமல் அவர் பேசியது வெட்கக் கேடானது.  ராகுல்காந்தி ஜி, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்தால், உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி எங்கள் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்கச்சொல்லி, அவரின் கருத்தை திரும்ப பெற சொல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்