புஷ்பா 2 ரிலோடட் வெர்ஷனைக் கொண்டாடும் ரசிகர்கள்… அப்போ 2000 கோடி கன்ஃபார்மா?

vinoth
வெள்ளி, 17 ஜனவரி 2025 (15:01 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு புஷ்பா 2 வசூல் 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாகி ஒரு மாதத்தைத் தாண்டியுள்ள போதும் இன்னும் கணிசமான அளவு வசூல் செய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகளவில் இதுவரை 1850 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தில் கூடுதலாக 20 நிமிடக் காட்சிகள் இணைக்கப்பட்டு ரிலீஸ்செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கணிசமான அளவு ரசிகர்கள் எண்ணிக்கை கூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்னென்ன காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன எனப் பார்ப்பதற்காக ரசிகர்கள் மீண்டுமொருமுறை புஷ்பா படத்தைப் பார்க்க வருவதாகத் தெரிகிறது. அதனால் படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்