புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:48 IST)
புஷ்பா படத்தின் வெற்றி அல்லு அர்ஜுனை பேன் இந்தியா ஹீரோவாக்கியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் பலமடங்கு உயர்ந்துள்ளது.

புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்தில் நடிக்க, கூடுதலாக சில நடிகர்களும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரிவிக்ரம் – அல்லு அர்ஜுன் கூட்டணி நான்காவது முறையாக இணையும் இந்த படத்தை அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இது சம்மந்தமான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்