ஒரு விளம்பரத்துக்கு அதிக சம்பளம் வாங்கும் ஆலியா பட்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:16 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை ஆலியா பட் சமூக வலைதள விளம்பரங்களில் நடிக்க அதிக தொகை வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகையான ஆலியா பட் கடந்த ஆண்டு தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்துக்கு அவர் எட்டர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன்ஸ் எனப் பெயர் வைத்துள்ளார்.

இதையடுத்து ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆலியா பட்டின் நிறுவனம் டார்லிங்ஸ் என்ற படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்திலும் ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஷெபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.    நேரடி ஓடிடி ரிலீஸாக நெட்பிளிக்

.இந்த இலையில் ஆலியாபட்டின் சமூக வலைதள கணக்குகளை பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார். இந்த  நிலையில்,  ஆலியா பட்  தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சினிமாவை விளம்பரம் செய்ய குறைந்தது ரூ.1 கோடி வாங்குவதியாக தகவல் வெளியாகிறது.

சினிமாவில் நடிக்க பல கோடி சம்பளம் பெறும் நடிகைகள் இந்த விளம்பரம் செய்ய இத்தனை சம்பளம் பெறுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சக நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்த ஆலியாபட் தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்