மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

vinoth

திங்கள், 1 ஜூலை 2024 (08:23 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முடிவை படக்குழு கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அந்த வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது திடீரென இயக்குனர் விஜய் மில்டன் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அதில் “இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அவர் இருக்கிறார் என்பது மட்டும் உறுதி” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்