எனக்கு தகுதியில்லை என்றால் தேசிய விருதை தாராளமாக எடுத்து கொள்ளுங்கள். அக்சயகுமார்

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (21:31 IST)
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக மிகச்சிறப்பாக 'டங்கல்' படத்தில் நடித்த அமீர்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காதது குறித்து பலர் தேர்வுக்குழு தலைவர் பிரியதர்ஷனை விமர்சனம் செய்தனர். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் இதுகுறித்து தனது அதிருப்தியை டுவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.



 


இந்த நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருபவர்களுக்கு அக்சயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். தனது 25 ஆண்டுகால திரையுலக வாழ்வில் தான் இந்த விருதை பெற தகுதியில்லை என்று நினைத்தால் தாராளமாக விருதினை திரும்ப பெற்று கொள்ளுங்கள் என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

அக்சயகுமார் நடித்த பெரும்பாலான படங்கள் ஆக்சன் மற்றும் கமர்சியல் படங்களாக இருந்தாலும் விருது பெற காரணமாக இருந்த 'ரஸ்டம்' திரைப்படத்தில் தேசிய பற்றுள்ள கதை இருந்தது. அக்சயகுமாரின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் இந்த விருது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளதால்  தேசிய விருதினை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்' என அக்சயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்