தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய அக்ஷரா - பெயரை மாற்றி பிக்பாஸில் நுழைந்தது எப்படி?

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (14:21 IST)
பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கும் அக்ஷரா ரெட்டி குறித்த திடுக்கிடும் சம்பவம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 
கடந்த 2013ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய ஸ்ராவ்யா சுதாகர் தான் இந்த அக்ஷரா ரெட்டி என சமூக வலைதளவாசிகள் செய்தி பரப்பியுள்ளனர். 
 
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெயரை மாற்றிக் கொண்டு அக்ஷரா ரெட்டி என்கிற பெயரில் வலம் வருகிறார். அதுமட்டுமல்ல விஜய் டிவி இவருக்கு புதிதல்ல 2018ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வில்லா டு வில்லேஜ் நிகழ்ச்சியில் ஸ்ராவ்யா சுதாகர் என்கிற பெயரில் பங்கேற்றிருக்கிறார் இந்த அக்ஷரா ரெட்டி. 
ஒவ்வொருத்தரும் பிக்பாஸில் வந்த பிறகு தான் தங்களது உண்மை முகத்தை காட்டுவார்கள். ஆனால் இவரோ தான் யார் என்பதையே மறைத்து விஜய் டிவி கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிட்டு பிக்பாஸில் கலந்துக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்