மீண்டும் இணையும் ஜீவா சந்தானம்… இயக்குனர் இவர்தான்!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:42 IST)
நடிகர் சந்தானம் மற்றும் ஜீவா நடிக்கும் படத்தை இயக்குனர் எம் ராஜேஷ் இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம். சமீபகாலமாக அவர் நடிப்பில் ஏ 1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் மட்டுமே ஓரளவு கவனம் பெற்றன. ஆனாலும் இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அவர் கூறி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் எம் ராஜேஷ் அவரையும் ஜீவாவையும் இணைத்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை உருவாக்க உள்ளாராம். இதில் ஜீவா அளவுக்கு சந்தானத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்