வெளியாகிறது ஏகே61 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்!? – போனி கபூர் திட்டம்?

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (11:29 IST)
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கடந்த பிப்ரவரியில் வெளியான படம் வலிமை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அஜித் படம் ஏதும் வெளியாகாத நிலையில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் சில விமர்சனங்களும் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் எச்.வினோத் – அஜித்குமார் கூட்டணியில் AK61 உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு பணிகள் வேகவேகமாக நடந்து வரும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஏகே61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி மறைந்த நடிகையும், போனி கபூரின் மனைவியுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள். அன்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்