துப்பாக்கி பயிற்சியில் அஜித்… கமிஷனர் அலுவலகத்துக்கு மீண்டும் வருகை!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:37 IST)
நடிகர் அஜித் சென்னை எழும்பூரில் உள்ள ரைபில் கிளப்புக்கு இன்று வந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் தொல்லை செய்து வந்த நிலையில், யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என அறிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சில சென்னையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பிற்கு நடிகர் அஜித் சென்றார். அவரை கண்டதும் உடனடியாக சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து இன்றும் அங்கு பயிற்சி மேற்கொள்வதற்காக அவர் சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரிடம் செல்பி எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்