தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை வேறு எந்த படமும் செய்யாத சாதனையை செய்த அஜித்தின் விஸ்வாசம்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:42 IST)
அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் அவரின் ஆல்டைம் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. தமிழகத்தில் மட்டும் அந்த படம் 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் தொலைக்காட்சியிலும் அந்த படம் சாதனைப் படைத்தது. முதல் முறை ஒளிபரப்பப் பட்ட போது 18 மில்லியனுக்கு அதிகமானோர் அந்த படத்தைப் பார்த்துள்ளனர். இதுவே தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகபட்ச சாதனை. அதுமட்டுமில்லாமல் மூன்றாவது முறை ஓளிபரப்பான போதும் 16மில்லியன் பார்வைகளைக் கடந்து டாப் 5ல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்த முதல் 5 இடங்களில் ரஜினி மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்