தீபாவளி ரிலீஸில் இருந்து பின் வாங்குகிறதா அஜித்தின் ‘விடாமுயற்சி’?

vinoth
சனி, 24 ஆகஸ்ட் 2024 (07:18 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வழக்கமாக அஜித் படம் என்றால் அப்டேட்டே வராமல் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் புலம்பித் தள்ளுவார்கள். வலிமை படத்தின் அப்டேட்டை எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் சென்றார்கள். ஆனால் விடாமுயற்சி படக்குழுவோ ஒரு வாரத்துக்கு இரண்டு அப்டேட் என தந்து கொண்டிருக்கிறது என்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்