அஜித்தின் குட் பேட் அக்லி தள்ளிப் போக வாய்ப்பு… நெட்பிளிக்ஸ் கொடுக்கும் அழுத்தமா?

vinoth
சனி, 1 பிப்ரவரி 2025 (09:30 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.   இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் டிஜிட்டல் உரிமைகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

அதனால் இரண்டு படங்களும் குறுகிய காலத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானால் அது எதாவது ஒரு படத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க சொல்லி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும்’ குட் பேட் அக்லி’ படத்தில்  திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்