குட் பேட் அக்லி படத்தைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vinoth

புதன், 15 ஜனவரி 2025 (13:49 IST)
சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் இடையே இடைவெளி எடுத்துக்கொண்ட அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதில் விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் குட் பேட் அக்லி ஷுட்டிங் இரண்டு கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன தேவி ஸ்ரீ பிரசாத் திடீரென நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டுக்கான தங்கள் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்