த்ரிஷாவின் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (11:11 IST)
விக்ரம், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் திரைப்படம் 'சாமி 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்து நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்துள்ளார். இவர் முதல் பாகமான 'சாமி' படத்தில் த்ரிஷா நடித்த புவனா என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா, பெண் பத்திரிகையாளராகவும் இந்த படத்தில் வருகிறாராம். சிறிய கேரக்டர் என்றாலும் தன்னுடைய நடிப்புக்கு சவால்விடும் கேரக்டர் என்பதால் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
 
முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து த்ரிஷா விலகினார். படக்குழுவினர் சமாதானப்படுத்தியும் அவர் இந்த கேரக்டரில் நடிக்க மறுத்துவிடவே தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, ஜான்விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்