ஆத்தாடி....மறுபடியும் பரத நாட்டியமா? கிண்டலுக்குள்ளாகும் ஐஸ்வர்யா ரஜினி!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (07:43 IST)
வாரிசு மகளும், தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 3 படத்தை இயக்கி இயக்குனராக கடந்த 2012ல் சிறந்த அறிமுகம் கொடுத்தார். கணவரை இயக்கி மெகா ஹிட் கொடுத்தார். 
 
ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கணவர்  தனுஷுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 
விவகாரத்துக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களை இயக்க மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே சமூகவலைதங்களிலும் யோகா, ஒர்கவுட் என எதையேனும் பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது நேற்று மாலை சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நம் பராம்பரிய கலைகளான பரத நாட்டியம், பறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, இசையமைப்பாளர் சந்தோஷ் சுபராமணியம், ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இந்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிறந்த பொங்கல் விழாவாக இது அமைந்தது என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன் அயோ நான் கூட பயந்துட்டேன் நீங்க தான் டான்ஸ் ஆடுறிங்களோன்னு என ட்ரோல் செய்துள்ளனர். இவர் ஏற்கனவே ஐநா சபையில் பரதநாட்டியம் ஆடி கிண்டலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்