விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

vinoth

புதன், 26 ஜூன் 2024 (07:30 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள விவேக், மனோ பாலா மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் இப்போது உயிரோடு இல்லை. அவர்களின் காட்சிகள் நீக்கப்படாமல் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பற்றி பேசியுள்ள கமல்ஹாசன் “நல்ல நண்பர்களான அவர்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர்களும் இந்த மேடையில் எங்களோடு இருந்திருக்க வேண்டும். விவேக் சம்மந்தப்பட்ட காட்சிகளை நேற்று முன்தினம்தான் படமாக்கியது போல உள்ளது. காலம் வேகமாக செல்கின்றது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்