விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

vinoth

புதன், 26 ஜூன் 2024 (07:40 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முடிவை படக்குழு கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அந்த வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரில் பார்க்கலாம். சென்சார் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்