குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டோம்… கேவி ஆனந்துக்கு ஏஜிஎஸ் நிறுவனம் அஞ்சலி!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:17 IST)
இயக்குனர் கே வி ஆனந்தின் மறைவு குறித்து அவரின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறி கமர்ஷியல் வெற்றிகளை ருசித்தவர் கே வி ஆனந்த். இவர் இயக்கிய கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ். இந்நிலையில் கே வி ஆனந்தின் மறைவை ஒட்டி ஏ ஜிஎஸ் நிறுவனம் அஞ்சலியை வெளிப்படுத்தியுள்ளது.

அதில் ‘ஏஜிஎஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை இன்று நாங்கள் இழந்து நிற்கிறோம். கே வி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும், மிகச்சிறந்த இயக்குநரும் ஆவார். முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர், ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்.’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்