கொரோனா 2வது அலை எதிரொலி: சென்செக்ஸ் 983 புள்ளிகள் சரிவு

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:01 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போல் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் எதிரொலியாக இன்றைய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது 
 
இன்றைய பங்குச்சந்தை தொடங்கும்போதே 500 புள்ளிகள் இறங்கியிருந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தை முடிவின்போது 983 புள்ளிகள் குறைந்து 48 ஆயிரத்து 782 என முடிவடைந்துள்ளது அதேபோல் நிப்டி 263 புள்ளிகள் குறைந்து 14 ஆயிரத்து 631 என வர்த்தகம் முடிவடைந்து உள்ளது 
 
இதன் காரணமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று ஒரே நாளில் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை இருந்தபோதும் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் அதன் பின்னர் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் தான் ஓரளவுக்கு பங்குச் சந்தை ஏறியது என்பதும் தெரிந்ததே. அதேபோல் இந்த ஆண்டும் தற்போது இரண்டாவது அலையின்போது பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்