எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகு ஐநா சபையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2016 (15:11 IST)
இந்தியாவின் 70 -வது சுதந்திரதினத்தை ஐநா சபை கொண்டாட தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 

 
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இசை நிகழ்ச்சியில் 193 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
 
ஐ.நா. சபையில் இதற்கு முன்பு 1966–ம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தியர் ஒருவரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது.
 
இவர்கள் இருவருமே தமிழர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.
அடுத்த கட்டுரையில்