அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தவர் மீது தாக்குதல்

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (21:36 IST)
ஆதிபுரூஸ் படம் வெளியிடும் தியேட்டர்களில் அனுமனுக்காக  ஒதுக்கப்பட்ட இருக்கையில்  அமர்ந்தவர் மீது ரசிகர்கள்  தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக  நேற்று  இப்படம்  வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், ஆதிபுரூஸ் படம்  நேற்று வெளியான ஒரே நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில்,  வெளியான முதல் நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஆதிபுரூஷ் படம் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே, இப்படம் வெளியாகும் திரையரங்குகளில்   இப்படத்தைப் பார்க்க வரும் அனுமனுக்கு ஒரு சீட்டை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெரும்பாலானான  திரையரங்குகளில்  ஒரு இருக்கை அனுமனுக்காக  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் ரசிகர் ஒருவர் படம் பார்க்க அமர்ந்ததால்,அனுமனுக்காக அந்த இருக்கையை முன்பதிவு செய்தவர்கள் கோபமடைந்து, அவரை அங்கிருந்து எழுந்திருக்கும்படி கூறியும், அவரை தாக்க முற்படும் வீடியோ  வெளியாகியுள்ளது.

நேற்று, ஆதிபுரூஸ் பற்றி திரையரங்கிற்கு வெளியில்  நின்று ரசிகர்கள் ஒருவர் இப்படம் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்து கொண்டிருந்தபோது, பிரபாஸ் ரசிகர்கள் ஆத்திரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்