'சிம்பு 49’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva

திங்கள், 14 ஏப்ரல் 2025 (13:10 IST)
நடிகர் சிம்பு தனது 49வது திரைப்படத்திற்கான இசையமைப்பாளராக சாய் அபிநயங்கரை தேர்வுசெய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் இசை பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிம்புவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் சிம்புவின் 49வது படத்தை ’பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 49வது படத்தின் இசை பொறுப்பை சாய் அபிநயங்கர் ஏற்கவுள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். 
 
இவர், தற்போது சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அதோடு மட்டுமின்றி, பிரபல இயக்குனர் அட்லி மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இணையும் மெகா படத்திற்கும், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் மற்றொரு படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
சாய் அபிநயங்கரை தனது படத்திற்கேற்ப தேர்ந்தெடுத்ததாகவும், அவரின் இசை புதிய உயிர் ஊட்டும் வகையில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்த சிம்பு, இசை பணிகள் பரபரப்பாக துவங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், சாய் அபிநயங்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சிம்பு தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்