இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக டாப்ஸி மீது புகார்!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (09:57 IST)
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டாப்ஸி, கழுத்தில் மகாலட்சுமி உருவத்துடன் இருக்கும் நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். கவர்ச்சி உடையணிந்து கழுத்தில் இந்த நகையை அணிந்திருப்பதால் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக இப்போது அவர் மீது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்