ஆர்யாவின் காதர்பாட்சா என்கிற முத்து ராமலிங்கம் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (09:52 IST)
சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. சமீபத்தில் அவர் இயக்கிய விருமன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்து முடிந்துள்ள நிலையில் படத்துக்கு ‘காதர்பாட்சா என்கிற முத்து ராமலிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் வரும் மார்ச் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருமன் வெற்றியால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்