கழட்டி விட்ட கிரிக்கெட் வீரர்: ஏக்கத்தில் ராய் லட்சுமி!!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (14:43 IST)
கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார். இந்த படத்தில் தன்னை நாயகியாக ஸ்ரீ சாந்த் சிபாரிசு செய்வார் என ராய் லட்சுமி எதிர்ப்பார்த்தாராம்.


 
 
ராய் லட்சுமியின் எதிர்பார்ப்பிற்கு பின்னர் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில் முன்னொரு காலத்தில் ராய் லட்சுமியும் ஸ்ரீ சாந்த்தும் ஒன்றாக சுற்றி வந்தனர்.
 
அப்போது கிரிக்கெட்டில் பின்னடைவு ஏற்பட்டதால் ஸ்ரீ சாந்த திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ராய் லட்சுமியின் நட்பை துண்டித்துவிட்டார்.
 
ஆனால், பழகிய பழக்கம் மறக்காமல் படத்தில் நடிக்க தன்னை அழைப்பார் என எதிர்பார்த்த ராய் லட்சுமிக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
 
ஸ்ரீ சாந்த்துக்கு ஜோடியாக வேறு ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளாரம். இதனால் ராய் லட்சுமி பயங்கர அப்செட்டில் உள்ளாராம்.
அடுத்த கட்டுரையில்