அஜித்தைப் பின்பற்றும் தெலுங்கு நடிகர்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (13:17 IST)
அஜித்தின் ‘விவேகம்’ டீஸரைப் பின்பற்றி, மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ டீஸர் ரிலீஸானதாக கூறப்படுகிறது.



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘ஸ்பைடர்’. இந்தப் படத்தில், மகேஷ் பாபுவின் ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, முக்கிய வேடத்தில் பரத் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது இந்தப் படம். இதன் டீஸர், நேற்று முன்தினம் வெளியானது.

அதில், அமர்ந்திருக்கும் மகேஷ் பாபு மீது எலக்ட்ரானிக் ஸ்பைடர் ஏறுவது மட்டுமே காட்டப்பட்டிருந்தது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் யாருமே காட்டப்படவில்லை. கடந்த மாதம் வெளியான ‘விவேகம்’ டீஸரில், அஜித்தைத் தவிர மற்ற யாரும் காட்டப்படவில்லை. ஆனாலும், டீஸரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை பல லட்சமாக இருந்தது. அதேபோல் மற்ற நடிகர்களைக் காட்டாமல் மகேஷ் பாபு மட்டுமே டீஸரில் வருவதால், அவர் அஜித்தை ஃபாலோ செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்