மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கும் க்யூன் எலிசபெத்!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (12:50 IST)
தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார். அதற்காக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தமிழில் அவர் மாதவன் மற்றும் நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதையடுத்து இப்போது மலையாளத்தில் நடிகர் நரேனுடன் இணைந்து அவர் நடிக்கும் க்யூன் எலிசபெத் என்ற படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்